தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள். - காவல்துறை.

Published : Apr 14, 2021, 01:13 PM ISTUpdated : Apr 14, 2021, 01:14 PM IST
தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள். - காவல்துறை.

சுருக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று 2 ஆம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 45 ஆயிரத்து 049 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக கொரோனாவின் 2 ஆம் அலை வேகமாக பரவி தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் தலைநகர் சென்னையில் காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1, 284 வழக்குகள் பதியப்பட்டு 2 லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 4 ஆயிரத்து 874 வழக்குகள் பதியப்பட்டு 9 லட்சத்து 74 ஆயிரத்து 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறையின் சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி