9 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் 18000 கோடி ரூபாய் நிதிஉதவி திட்டம்.. 25 ஆம் தேதி துவக்கிவைக்கிறார் மோடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2020, 4:35 PM IST
Highlights

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதி தொகை திட்டத்தை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, (நாளை மறுதினம்) பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி  துவக்கி வைக்கிறார் என  பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) டிசம்பர் 25ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும், வீடியோ கான்பரன்சிங் மூலம் இதற்கான திட்டத்தை பிரதமர் மோடி அன்று பகல் 12:00 மணிக்கு  துவக்கிவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம் கிசான்)  யோஜனா  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதிஉதவி ஒரு ஆண்டில் நான்கு மாதங்களுக்கு ஒரு என முறையே 2000 ரூபாய் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதி தொகை திட்டத்தை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, (நாளை மறுதினம்) பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் என  பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதல் தவணை அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இரண்டாவது தவணை எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் அதற்கான திட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் தூக்கி வைக்கிறார். பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று ஹெக்டேர் வரை சொந்த நிலம் வைத்திருக்கும் நளிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளின் 6000 நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியான விவசாயக் குடும்பங்களை மாநில அரசும் மற்றும் யூடி நிர்வாகம் தேர்வு செய்து அவர்களின் வங்கி கணக்கில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. 

நாளை மறுதினம் 12 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்க உள்ளார். பிரதமர் அறிவிக்கவுள்ள சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் சுமார் 9 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடையும் என கூறப்பட்டுள்ளது. அதில் 6 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளனர். பிரதமர் கிசான் திட்டம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு  முயற்சிகளையும் தங்களில் அனுபவங்களையும் விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

click me!