
15 அமைச்சர்கள் 35 எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு வர தயாராக உள்ளதாகவும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒ.பி.எஸ்க்கு கிடையாது எனவும் அவரது ஆதரவாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சசிகலாவும் தினகரனும் ஜெயிலுக்கு போனதை தொடர்ந்து எடப்பாடி அணியும் ஒ.பி.எஸ் அணியும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டமிட்டனர்.
ஆனால் பெரியவர்கள் என்ற போட்டி தற்போது நிலவி வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று நினைத்த நிலையில், ஒ.பி.எஸ் தரப்பில் கே.பி.முனுசாமியும் எடப்பாடி தரப்பில் தம்பிதுரை, சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாறி மாறி குறை கூறி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
பிறகு இருதரப்பையும் அவர்களது தலைமை கட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணி தனித்து செயல்படவே தொண்டர்கள் விரும்புகின்றனர் என கருத்து தெரிவித்தார். போதாதகுறைக்கு இதுவும் பூகம்பமாய் வெடித்தது.
இந்நிலையில், இன்று சேலத்தில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒ.பி.எஸ் ஆதரவாளர் செம்மலை கலந்து கொண்டு பேசினார். இதிலும் ஒரு வெடிகுண்டை கொளுத்தி போட்டுள்ளார்.
அதாவது 15 அமைச்சர்கள் 35 எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு வர தயாராக உள்ளதாகவும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒ.பி.எஸ்க்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் ரியாக்சன் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.