சென்னையில் மழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.. பம்பரமாக சூழலும் முதல்வர் ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 6:19 PM IST
Highlights

கனமழையால் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை வழங்கினார். மேலும், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

சென்னையில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒரே இரவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை சற்று ஓய்ந்த நிலையில், மாலையில் மீண்டும் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கனமழையால் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை வழங்கினார். மேலும், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில், மழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் முழு விவரம்;-  

* மண்டலம் 1;- கமல் கிஷோர்

* மண்டலம் 2;- கணேசன்

* மண்டலம் 3;- சந்தீப் நந்தூரி

* மண்டலம் 4;- டி.ஜி. வினய்

* மண்டலம் 5;- மகேஸ்வரி ரவிகுமார்

* மண்டலம் 6;- பிரதீப் குமார்

* மண்டலம் 7;-சுரேஷ்குமார்

* மண்டலம் 8;- பழனிசாமி

* மண்டலம் 9;- ராஜாமணி

* மண்டலம் 10;- எம்.விஜயலட்சுமி

* மண்டலம் 11;- சங்கர்லால் குமாவத்

* மண்டலம் 12;- எல்.நிர்மல்ராஜ்

* மண்டலம் 13;-மலர்விழி

* மண்டலம் 14;- சிவஞானம்

* மண்டலம் 15;- வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!