
121 MLA தான் அவங்க பக்கம்...”மக்கள் எங்கள் பக்கம்”- ஒபிஎஸ் பளார் பேச்சு...
ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆர்.கே நகரில் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார் .
அப்போது கருத்து தெரிவித்த ஒபிஎஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி புகழாரம் சூட்டினார்.பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம் ,தாங்கள் தான் உண்மையான அதிமுக கட்சியினர் என்றும், , தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என்றும் என்றும் குறிபிட்டார் .
தீபக் குறித்து கருத்து
தொடர்ந்து பேசிய ஒபிஎஸ் “ நேற்று ஒரு தனியார் தொலைகாட்சியின் மூலம் தீபக் தன் கருத்தை தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து என குறிபிட்டார் . தீபக் தன்னுடைய உள்ளத்தில் இருந்து கருத்து கூறியுள்ளார் என்றும் மேலும் தெரிவித்தார்.
தீபாவிற்கு வரவேற்பு
பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்க தயாராக உள்ளேன் என்றும் , மக்களின் ஆதரவு தங்களுக்கு தான் உள்ளது என்றும் மேலும் ஒரு முறை உரக்க குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்
121 MLA தான் அவங்க பக்கம் ஆனால் மக்கள் எங்கள் பக்கம்
தனக்கு உண்டான ஆதரவு பற்றி பன்னீர் செல்வம் தெரிவிக்கும் போது, 121 MLA தான் அவங்க பக்கம், ஆனால் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என பெருமிதமாக குறிபிட்டார் ஒபிஎஸ்