அக்கவுண்டில் 12 ஆயிரம் கோடி...!! சொன்னதைபோலவே செய்து காட்டிய மோடி...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2020, 5:56 PM IST
Highlights

அதே போல் வரும் 2022ம் ஆண்டுக்குள் நாட்டு விவசாயிகளின் வருமானத்தை  இருமடங்காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்,   விவசாயிகளுடன் அரசு இணைந்திருப்பதால்  பல சாதனைகளைப் படைக்க முடிகிறது என்றார் .

ஆறுகோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 12,000 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும்  15 லட்ச ரூபாய் பணம் போடப்படும்  என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் ,   தற்போது விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் வர வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .  அதே நேரத்தில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் , 

தரத்தையும் மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .  இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ,  இந்தியா அதிக உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் பட்டியலில் முதல் மூன்று  இடத்தில் உள்ளது என்றார்,  ஒரு குறிப்பிட்ட தானியத்தை மற்றும்  உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னேறி வருகிறது  என்றார் .  இந்தச் சாதனையை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும் அரசின் சிறப்பான திட்டங்களாலும் இது சாத்தியமாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

அதே போல் வரும் 2022ம் ஆண்டுக்குள் நாட்டு விவசாயிகளின் வருமானத்தை  இருமடங்காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்,   விவசாயிகளுடன் அரசு இணைந்திருப்பதால்  பல சாதனைகளைப் படைக்க முடிகிறது என்றார் .  இதுவரையில் ஆறு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது  இது  மிகப்பெரிய சாதனை என அவர் தெரிவித்தார்.
 

click me!