
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஐஏஎஸ் அதிகாரி விபு நாயருக்கு சிறப்பு திட்டங்கள் துரையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையர் ஷங்கர் லால் குமாவத் மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மாற்றப்பட்டு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாற்றப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையின் துணைச் செயலாளர் அம்ரித் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் மாற்றப்பட்டு, சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சிக் கழகத்தின் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் செயலாளர் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு, ஓசூர் உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவுத்துறையின் இணைச் செயலாளர் வளர்மதி மாற்றப்பட்டு, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வருவாய் நிர்வாகத் துறையின் இணை ஆணையர் எம்.லஷ்மி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மகளிர் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.