11 எம்.எல்.ஏ.க்களுடன் நடுக்கத்தில் ஓபிஎஸ்... பிப்ரவரி 4-ம் தேதி முதல் கச்சேரி ஆரம்பமாகிறது..!

Published : Feb 01, 2020, 04:28 PM ISTUpdated : Feb 04, 2020, 01:02 PM IST
11 எம்.எல்.ஏ.க்களுடன் நடுக்கத்தில் ஓபிஎஸ்... பிப்ரவரி 4-ம் தேதி முதல் கச்சேரி ஆரம்பமாகிறது..!

சுருக்கம்

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சபாநாயகர் விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக, அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் நீதிபதி சிக்ரி ஓய்வுப்பெற்றதை அடுத்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரிக்க கோரி கடந்த வாரம் திமுக சார்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் பிப்ரவரி 4-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!