கொரோனாவை விலை கொடுத்து வாங்காதீங்க.. அப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகிடும்.. அரசை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு..!

By vinoth kumarFirst Published Jun 4, 2020, 1:30 PM IST
Highlights

அரசு தீவிரமாக சிந்தித்து கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும் என  முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அரசு தீவிரமாக சிந்தித்து கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும் என  முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என்று அரசு  தீவிரமாக உள்ளது. 

இந்நிலையில், சிவகாசியில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 10ம் வகுப்பு தேர்வை ஒன்பதரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தற்போதைய நிலையில் தேர்வுக்குப் பள்ளிகளை தயார் செய்வதும் மாணவர்கள் தேர்வு எழுத வருவதும் மிகச்சிரமம்.

உடனடியாக 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மிகுந்த அச்சத்தை தரக்கூடியதாக இருக்கும். எனவே, அரசு தீவிரமாக சிந்தித்து கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும். ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் தேவை என்ற நடைமுறை கொரோனோ பொதுமுடக்கம் காலத்தில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

click me!