மேற்கு வங்க அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தாயராகும் 107 எம்எல்ஏக்கள் ! பாஜகவுக்கு இணைகின்றனர் !!

By Selvanayagam PFirst Published Jul 13, 2019, 8:38 PM IST
Highlights

மேற்குவங்க மாநிலத்தில்  திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  காங்கிரஸ் மற்றும் மஜத  எம்.எல்.ஏ.க்கள்  16 பேர் அண்மையில்  ராஜினாமா செய்ததும், பாஜகவில் இணைந்து அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.  இதே போல் கோவா மாநிலத்தைச் சேர்ந்த  10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 107 எம்.எல்.ஏக்களும் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் முகுல் ராய் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம்  ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகுல் ராய் பாஜகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.

click me!