ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரை சந்தித்த செந்தில் பாலாஜி... உதறலில் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Jul 13, 2019, 6:52 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க திமுக பல்வேறு அஸ்திரத்தை கையில் எடுத்தும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது. இந்நிலையில், இந்த எப்படியாவது எடப்பாடியை ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க திமுக பல்வேறு அஸ்திரத்தை கையில் எடுத்தும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது. இந்நிலையில், இந்த எப்படியாவது எடப்பாடியை ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக மு.க.ஸ்டாலின் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் ஓ.எம்.ஜி நிறுவனத்தின் நிர்வாகி சுனிலும், செந்தில் பாலாஜியையும் களமிறக்கி விட்டு போனார். இப்போது வரை பல்ஸ் பார்த்த அவர்கள் கடந்தவாரம் ஸ்டாலின் வீட்டிலேயே கூடி ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி ஆலோசித்துள்ளனர்.  

அத்தோடு மட்டுமல்ல செந்தில் பாலாஜி கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த சில அதிமுக புள்ளிகளையும் நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருக்கும் தனக்கு மிக நெருக்கமானவர்களை மீண்டும் செந்தில்பாலாஜி சந்தித்து பேசியிருக்கிறார். இந்தத் தகவல் உளவுத்துறை மூலமாக எடப்பாடி காதுகளுக்கு போக கண் சிவந்து கடுப்பானதாக கூறப்படுகிறது.  சட்டமன்றம் வரும் 20-ம் தேதியோடு முடிவடையும் நிலையில் திமுக முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை இந்தக் கூட்டத் தொடரிலேயே எடுத்துக் கொள்வது பற்றி சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால் அவ்வாறு உடனே எடுத்துக் கொள்வாரா என்பதும் கேள்விக்குறிதான்.

 

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக அறிவித்தார் ஸ்டாலின். உண்மையில் அவர் அப்படிச் சொன்னால் அதிமுக அந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிடும். அமைதியாக இருந்து பின்னணியில் ஆட்சி கவிழ்ப்புக்கான விஷயங்களை முடுக்கி விடும் திட்டத்தில் தான் மு.க.ஸ்டாலின் அப்படி சொன்னதாக வெளியாகியுள்ளது. அதிமுகவை பாஜக அரசு காப்பாற்றி வருவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் அதிமுக ஆட்சியை எப்படி கவிழ்ப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

click me!