அடி தூள்... முதல்வர் அறிவித்த 1000 ரொக்கப் பணம்..!! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

Published : Jul 29, 2020, 12:56 PM IST
அடி தூள்... முதல்வர் அறிவித்த 1000 ரொக்கப் பணம்..!! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

சுருக்கம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி 1000 ரொக்கம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடை உத்தரவு காலத்தில், வாழ்வாதார நிதியாக ஆயிரம் ரொக்கமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி 1000 ரொக்கம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 1000 நிவாரண நிதி ரொக்கமாக வழங்குவதற்கான, பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள், வார்டு வாரியாக பெறப்பட்டு அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தடை உத்தரவு காலத்தில் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உட்பட தங்களது விவரங்களை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான நீலநிற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டையின் நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றிதழ்களை வழங்கி மேற்படி திட்டத்தில் பயனடையுமாறும் மேலும் இது குறித்து தகவல் அறிய தங்கள் பகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனவும் ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி