
100 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டு 4 வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறையில் எடப்பாடி அமைச்சரவையில் பொறுப்பேற்ற செங்கோட்டையன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றார். அவை பெரும்பாலனவை மக்களாலும் மாணவர்களலாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் 100 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டு 4 வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் உள்ள தொழில்நுட்பம், கலை, அறிவியல் ஆகிய நுட்பங்களை தெரிந்து கொள்ளும் பொருட்டும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஜப்பான், சீன, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, என பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள், இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
286 பாடங்களை படிக்கலாம் எனவும் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் தருகிறோம் எனவும் மாணவர்களுக்கு அதிகமாக லேப்டாப் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.