பாஜகவின் வேல் யாத்திரைக்கு ஆப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Nov 12, 2020, 6:17 PM IST
Highlights

அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வருவதால் தமிழக அரசு சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர்16ம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வருவதால் தமிழக அரசு சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர்16ம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதே சமயம் பல்வேறு துறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில், நவம்பர் 16ம் தேதி முதல் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. இதனிடையே தமிழக அரசின் தடையை மீறி பாஜக சார்பில் பல கட்டங்களாக யாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாஜகவின் தலைவர்கள் உள்பட கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் நெருக்கமாக ஊர்வலம் செல்கின்றனர்.

இதேபோல திமுக தரப்பிலிருந்து ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு இடங்களிலும் 100 பேர் வரை கலந்துகொள்வது போல ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. இதேபோல ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டங்களை நடத்தத் துவங்கிவிட்டன.

இந்நிலையில் தமிழக அரசு இன்று (நவம்பர் 12) வெளியிட்ட அறிவிப்பில், “சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்படுகிறது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் அபாயம் காரணமாக இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!