10 எம்எல்ஏக்கள் இப்போதே ஓபிஎஸ்சுக்கு ஆதரவாம் - திடீர் திருப்பம்..!!

 
Published : Feb 18, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
10 எம்எல்ஏக்கள் இப்போதே ஓபிஎஸ்சுக்கு ஆதரவாம் - திடீர் திருப்பம்..!!

சுருக்கம்

11 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களின் வாகனங்களில் பாதுகாப்பாக அணிவகுத்து கிளம்பினர். இவர்களில் 10 பேர் உடனடியாக ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக சசிகலா அணி , ஓபிஎஸ் அணி என பிரிந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் தங்களது ஆதரவாளர்கள் என கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். 

அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு ஏதுவாக சில எம்.எல்.ஏக்கள் தப்பி வந்தனர். ரிசார்ட் முழுதும் யாரும் தப்பி விட முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.

சில எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஊடகங்களுக்கு தாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை என்று கூறிவந்தனர். ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் மன நிலை என்ன நிலையில் இருக்கிறது எனபது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்க அழைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பின்னரும் கூவத்தூரிலிருந்து எம்.எல்.ஏக்களை வெளியே வில்லை. இதனால் எம்.எல்.ஏக்கள் என்னமனநிலையில் உள்ளனர் எனபது தெரியவில்லை.

இன்று காலை அனைவரும் அமைச்சர்கள் பாதுகாப்பில் அவர்களது  வாகனங்களில் தலைமைசெயலகம் அழைத்து வரப்படுகின்றனர் . இந்நிலையில் நேற்று இரவே ஒரு எம்.எல்.ஏ தப்பி சென்றுவிட்டார்.

வெளியே அழைத்து வரப்பட்ட எம்.எல்.ஏக்கள் செல்போன்கள் தற்போது அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்சிடம் பேசி ஆதரவை தெரிவித்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!