#BREAKING வன்னியர்களுக்காக வரிந்து கட்டும் தமிழக அரசு... சொன்னப்படியே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

Published : Nov 16, 2021, 11:53 AM ISTUpdated : Nov 16, 2021, 04:41 PM IST
#BREAKING வன்னியர்களுக்காக வரிந்து கட்டும் தமிழக அரசு... சொன்னப்படியே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

சுருக்கம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பங்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அவசல அவசரமாக சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், இந்த சட்டத்தை  எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு பாமகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசு சார்பிலும் மேல்துறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்கப்பட்டது. அது மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டால் தான் எழுதப்பட்டது ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்திற்காக மட்டுமல்ல 7 பிரிவினருக்கான அரசமைப்புச் சட்டத்தின்படி உள் ஒதுக்கீடு சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உள் ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. தற்போது ஒட்டுமொத்த நிர்வாக பெரும் இன்னல்களுக்கு இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்து இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்ய சென்னை உயர் மதுரை கிளை உத்தரவு தவறானது உரிய உத்தரவை பிறப்பிக்க முகாந்திரம் உள்ளது. இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!