EVKS இளங்கோவனை உதைத்தால் 1 லட்சம்.. அண்ணாமலையை தொட்டால் இதுதான் பதலடி. எகிறி அடித்த Dr.சரவணன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2021, 1:02 PM IST
Highlights

காங்கிரஸ் என்ற ஒரு தேசிய கட்சியில் முக்கியமான தலைவர், ஒரு மூத்த தலைவர் இப்படி பேசியது எங்களுக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தரமின்றி பேசுவதுதான் ஈவிகேஎஸ்சின் அடிப்படை குணம். இதேபோல தான் கலைஞர் கருணாநிதியையும் அவர் பேசினார், 

பாஜக மாநில தலைவரை தரக்குறைவாக பேசிய  காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்கினால் ஒரு லட்சம் என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்காத நிலையில் திமுகவை உதறிவிட்டு அன்றைய பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் டார்கர் சரவணன். ஏற்கனவே திமுகவின் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் பாஜகவில் இணைந்த நிலையில் திமுகவின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சரவணன் அதிரடியாக பாஜகவில் இணைந்தார். அவரின் இந்த இணைவு அப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இணைந்த உடன் அவருக்கு  பாஜகவில் மதுரை நகர் மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர். காங்கிரஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் மிககடுமையாக விமர்சித்திருந்தார்.  

இந்நிலையில் அவரின் பேச்சை மேற்கோள்காட்டி டாக்டர் சரவணன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் விமர்சித்து பேசினார்.  அதாவது, ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி, அவர் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையில் செல்வாக்கு புரியாமல் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார், ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி அவரை புறம் தள்ளி விட்டது. அதனால்தான் அவர் தன்னை ஒரு அனாதையாக உணர்கிறார். அவர் அரசியலில் உள்ளார் என்பதை  பிறர் உணரவேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு கடுமையான வார்த்தைகளில் பேசி வருகிறார். நான் அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், அவர் மதுரையில் கால்வைக்க முடியாது, ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈவிகேஎஸ் இளங்கோவனை எட்டி உதைத்தால் அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் மதுரை மாவட்ட பாஜக சார்பில் தரப்படும் என நான் அறிவிக்கிறேன் எனக்கூறியிருந்தார். 

அவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கொந்தளிப்பு அடைய வைத்தது. இதுகுறித்து மருத்துவர் சரவணனுக்கு எதிராக பலரும் சமூகவலைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் சரவணன் தான் பேசியதை குறித்தே மீண்டும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  எங்களது மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அப்போது செய்தியாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்ணாமலையை தவறாக பேசி இருக்கிறாரே என கேள்வி எழுப்பினார். அப்போதுதான். அவர் பேசிய ஆடியோவையும் வீடியோவை  கேட்டேன் அதில் மிகமோசமாக பிரதமர் மோடியையும் அண்ணாமலையும் அவர் பேசியிருக்கிறார். அண்ணன் எச்.ராஜா அவர்களை மோசமாக பேசியிருக்கிறார். குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை மிக நாகரிகமற்ற முறையில் பேசி இருக்கிறார். அவர்தான் ஜெய்பீம் படத்தில் நடந்த ஒரு சர்ச்சை அதாவது சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் என்கிறார்கள் ஆனால் அண்ணாமலைக்கு வெறும் 10 ஆயிரம் போதும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அதில் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் என்ற ஒரு தேசிய கட்சியில் முக்கியமான தலைவர், ஒரு மூத்த தலைவர் இப்படி பேசியது எங்களுக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தரமின்றி பேசுவதுதான் ஈவிகேஎஸ்சின் அடிப்படை குணம். இதேபோல தான் கலைஞர் கருணாநிதியையும் அவர் பேசினார், மறைந்த முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதாவையும் இப்படித்தான் பேசிவிட்டு பிரச்சனையில்  மாட்டிக்கொண்டார். அவருக்கு attention seeking disorder என்ற மனநோய் இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை இப்படி பேசிவதை எந்த பாஜக தொண்டனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காகத்தான் நான் அப்படி பதிலடி கொடுத்தேன். ஒரு மூத்த தலைவர் இப்படி ஒரு நாகரிகமற்ற முறையில் பேசி இந்த பிரச்சினையை துவக்கி வைத்ததிருக்கிறார். அவர்தான் அதற்கான காரணம். மொத்தத்தில் தரமற்று பேசிய  ஈவிகேஎஸ் இளங்கோவனை இப்படி பேசியதில் தவறு ஒன்றும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.  என அவர் கூறியுள்ளார்.
 

click me!