1 மணி நேரம்... 100 மணி நேரம்... 5000 மணி நேரம் காத்திருப்பேன்... போராட்டத்தில் உறுதிகாட்டிய ராகுல் காந்தி..!

By Thiraviaraj RMFirst Published Oct 6, 2020, 5:38 PM IST
Highlights

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி டிராக்டரில் சென்றபோது, ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி டிராக்டரில் சென்றபோது, ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தார்.

முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள பத்னி காலன் பகுதியில் இருந்து பேரணியை தொடங்கினார். கடைசி நாளான இன்று நுர்புர் என்ற இடத்தில் இருந்து ஹரியானாவின் பாட்டியாலா வரை டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு செல்லும் போது எல்லையில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார்.

They have stopped us on a bridge on the Haryana border. I’m not moving and am happy to wait here.

1 hour, 5 hours, 24 hours, 100 hours, 1000 hours or 5000 hours. pic.twitter.com/b9IjBSe7Bg

— Rahul Gandhi (@RahulGandhi)

 

அப்போது நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன், மகிழ்ச்சியாக இந்த இடத்தில் காத்திருப்பேன். ஒரு மணி நேரம், ஐந்து மணி நேரம், 24 மணி நேரம், 100, 1000 அல்லது 5000 மணி வரை காத்திருப்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதன்பின் ஹரியானா மாநிலத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் போன்றோர் கலந்து கொண்டனர்.

click me!