திமுக- அதிமுகவில் அடுத்து ராஜ்யசபா எம்.பிக்கள் யார்..? யாருக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்..!

By Vishnu PriyaFirst Published Feb 12, 2020, 6:16 PM IST
Highlights

 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டெல்லி மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார்.

12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
 

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சர்ந்த டி.கே.ரங்கராஜன், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பா  விஜிலா சத்யானந்த், மேட்டுபபாளையம் செல்வராஜ், முத்து கருப்பன் ஆகியோர் தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது.
 
இதனால் 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 

click me!