முகப்பரு தொல்லையா..? கவலை வேண்டாம்... 3 நிமிடம் இதை செய்யுங்கள்...!

By ezhil mozhiFirst Published Mar 7, 2019, 8:47 PM IST
Highlights

நம் சருமத்தை நன்றாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் ஆர்வம்  இருக்காது. ஆனால் நம் முகத்தில் சிறிய தழும்பு ஏற்பட்டாலும் கூட நம் மனம் வேதனை படும் அல்லவா..?  

நம் சருமத்தை நன்றாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் ஆர்வம்  இருக்காது. ஆனால் நம் முகத்தில் சிறிய தழும்பு ஏற்பட்டாலும் கூட நம் மனம் வேதனை படும் அல்லவா..?  

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்கள் ஆனால், அவர் முகத்தில் பல பருக்கள் இருக்கும்.. அவர்களின் அழகை வெகுவாக குறைத்து விடும்...

சரும பிரச்சனை

சருமம் வறட்சி....

எண்ணெய் பசைத்தன்மை ....

முகப்பரு

கரும்புள்ளி என சொல்லிக்கொண்டே போகலாம்

இதற்கெல்லாம் என்ன வழி என்பதை பார்க்கலாம் வாங்க...

முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்...

பின்னர் பாலில் முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும்...

பின்னர் உலர்ந்த பிறகு, காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.

அதன் பின், வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்

பின்னர் சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதே போன்று சில நாட்கள் செய்து வந்தால் போதும் முகம் பளிச்சென்று  இருக்கும்

முகப்பருக்கள் நீங்க...

வாழைப்பழ தோலை நன்கு அரைத்து உடன் தேனை சேர்த்து முகத்தில் தடவி வர, முகப்பரு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வறட்சி ஏற்படாது....

பருக்கள் மூலம் வீக்கம் ஏற்படுவது கூட இருக்காது....

வாழைப்பழம் மசாஜ் சுமார் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.. பின்னர் கழுவி விட வேண்டும் ...

வாழைப்பழ தோலுடன் கற்றாழை

கற்றாழை இலை ஜெல்லுடன் வாழைப்பழ தோலை சேர்த்து பயன்படுத்தினாலும் முகப்பரு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

வாழைப்பழ தோலுடன் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் தோன்றும் பருக்கள் கொடுக்கும் வீக்கத்தை வெகுவாக குறைக்கலாம்

வாழைப்பழ தோலுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.                                         

click me!