உலக சுகாதார தினம்! இக்கட்டான சூழ்நிலையில் தன்னலமற்று சேவை செய்யும் அனைவருக்கும் "நன்றி" சொல்லும் நேரம்!

By ezhil mozhiFirst Published Apr 7, 2020, 6:06 PM IST
Highlights

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் போது தினமும் ஒரு விதமான பயத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படியொரு தருணத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கூட நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. 

உலக சுகாதார தினம்! இக்கட்டான சூழ்நிலையில் தன்னலமற்று சேவை செய்யும் அனைவருக்கும் "நன்றி" சொல்லும் நேரம்!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுகாதாரம் என்றாலே முதலில் நம் வீடு சுத்தமாக இருந்தாலே நாடு சுத்தமாக இருக்கும் என்பதனை புரிந்துக்கொண்டு, எப்போதும் நாம் தூய்மையை பேணி காத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்

கொரோனா வைரஸால் உலக நாடுகளே ஸ்தம்பித்து வரும் நிலையில், தன்னலமற்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதில் முழுமையாக ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள், பத்திரிக்கையாளர்கள்,தன்னார்வலர்கள் என அனைவருக்கும் இந்த நாளில் நன்றி தெரிவிக்க கடமை நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம் என்பதனை மறந்து விட கூடாது.

குறிப்பாக, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் போது தினமும் ஒரு விதமான பயத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படியொரு தருணத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கூட நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

"சுத்தம் சுகாதாரம் தரும்" சுத்தம் சோறு போடும் என்பார்கள். அதற்கேற்றவாறு நம் சுகாதாரமாக இருந்து நம்  ஆரோக்கியத்தை பேணி காக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சுகாதார தினத்தன்று தூய்மை பற்றியும், சுகாதாரம் பற்றியும் மட்டுமே பேசி இருப்போம். ஆனால் இந்த வருடம் உலக நாடுகளுக்கே பெரும் சவாலாக அமைந்து விட்டது கொரோனா.

நாம் உட்கொள்ளும் உணவு முறையிலும் சுகாதாரமான உணவு முறையை தான் பின்பற்ற வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவும் சாதக சூழல் அதிகமாக உள்ளதால், எந்த பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தாலும் அதனை ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு தண்ணீரால் கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும். 

சுகாதாரத்தை பேணி காப்பது மட்டுமல்லாது தம்மை தனிமைப்படுத்திக்கொண்டு நாமும் பாதிக்காமல், நம்மால்  மற்றவர்களும் பாதிக்காமல் நலமுடன் வாழ இந்த சுகாதாரத்தினத்தன்றுஓர் உறுதிமொழி எடுக்கலாம்.  

click me!