ஏன் அமாவாசையில் குழந்தை பிறக்க கூடாது...? காரணம் தெரியுமா...?

First Published Jun 29, 2018, 7:20 PM IST
Highlights
Why should not the child be born in the no moonday?


பொதுவாக பெரியவர்கள், அமாவாசையன்று குழந்தை பிறக்க கூடாது என்று சொல்லுவார்கள். அன்று பிறக்கும் குழந்தைகள் பொய் சொல்லுவது திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் சிலர் கூறுவதை கேட்டிருப்போம். அது உண்மை தானா..? ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு..? வாருங்கள் இது பற்றி தெரிந்துக்கொள்ளலாம். 

அமாவாசை தினம் அன்று சூரியனும், பூமி, சந்திரன் இவைகள் சார்ந்த விவரம் தான் பௌர்ணமி மற்றும் அமாவாசை.

சூரியன் ஆன்மா என்பதால் ஆவி உலகில் உள்ள ஆன்மாக்கள் அமாவசையன்று பூமிக்கு வரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. 

அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது.

அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான். சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி.

எப்படியும் குழந்தை பிறப்பதை நாம் தடுக்க முடியாது... ஆனால், பரிகாரம் செய்து அதனை மாற்றலாம் என்றும் கூறுகிறது சாஸ்திரம். 

 


 

click me!