அமேசான் காட்டுக்கு தீ வைத்தது இவரா..? டைட்டானிக் ஹீரோவை "கை" காட்டிய பிரேசில் அதிபர்...!

By ezhil mozhiFirst Published Dec 2, 2019, 6:43 PM IST
Highlights

அமேசான் காடு எப்போதும் இருப்பது போலவே பசுமையாக இருக்க வேண்டும் என மக்கள் தங்களது கருத்துக்களை சமூ வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது இவரா..? டைட்டானிக்  ஹீரோவை "கை" காட்டிய பிரேசில் அதிபர்...! 

உலகிலேயே அதிக வனப் பகுதியைக் கொண்ட "உலகின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் காடு சென்ற ஆண்டு தீப்பற்றி எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலக நாடுகள் அவர்களது பெரும் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். மேலும் பல சமூக ஆர்வலர்கள் அமேசான் காட்டு தீ குறித்து கவலை தெரிவித்ததோடு எப்படியும் விரைவில் தீயை அணைக்க வேண்டும் என பரவலான கருத்தை தெரிவித்து வந்தனர். 

அமேசான் காடு எப்போதும் இருப்பது போலவே பசுமையாக இருக்க வேண்டும் என மக்கள் தங்களது கருத்துக்களை சமூ வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் டைட்டானிக் பட ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோ இதுபற்றி கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த காட்டுத்தீயை அணைப்பதற்கு 5 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லவேண்டுமென்றால் 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெயில் போல் சனரோ கருத்து தெரிவிக்கும் போது, "ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் பட ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோ தான் அமேசான் காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்தார் என குற்றம் சாட்டி, இதோடு அது குறித்து முழு விளக்கத்தை அளிக்காமல் எந்த ஒரு ஆதாரத்தையும் காண்பிக்காமல் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ள டைட்டானிக் பட ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோ, "இயற்கை வளத்தையும்,பாரம்பரிய கலாச்சாரத்தையும் பாதுகாக்க பிரேசில் மக்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு இருக்கிறது அமேசான் காடுகளை பாதுகாக்க ஈடுபட்டுவரும் கல்வியாளர்கள் விஞ்ஞானிகள் அனைவருக்கும் நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் அதிபரின் கருத்துக்கும் மறுப்பு தெரிவித்து உள்ளார். 

click me!