ஒரே நாளில் "திருப்பதி தரிசனம்"...! காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டாம்...!

First Published May 25, 2018, 1:25 PM IST
Highlights
we no need to wait in waiting hall in tirupathi


திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட யாருக்குதான் விருப்பம் இருக்காது.  அதுவும் கோடை விடுமுறை என்பதால் இப்போது தான் அதிக மக்கள் திருப்பதிக்கு படை எடுப்பார்கள்

அந்த வகையில் நாளுழு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது.

திருப்பதி தரிசனத்தின் முறைகள் :

சிறப்பு தரிசனம்

திவ்ய சரிசனம் ( மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு )

சர்வ தரிசனம் ( இலவச தரிசனம் )

சர்வ தரிசனம் என அழைக்கப்படும், இலவச  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது

இதனை தவிர்க்கும் பொருட்டு, நாள்  மற்றும் நேரம் குறிப்பிட்ட டோக்கன் தரிசன  முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.

ஒரே நாளில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

இதன்  மூலம் காத்திருப்பு அறையில், நீண்ட நேரம் காத்திருக்காமல் ஒரே நாளில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

சனி ஞாயிறு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பக்தர்கள் வருவதால்,  அவர்களுக்காக 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், 

திங்கள் - வெள்ளி  வரை - 20 ஆயிரம் டிக்கெட்டுகளும்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என தேவஸ்தான  நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

click me!