
நம் முன்னோர்கள் எதை செய்தலும்,அதில் ஒரு உண்மை இருந்தது. எந்த ஒரு செயலிலும் அர்த்தம் இருந்தது...உண்ணும் உணவில் சத்து இருந்தது..ஆனால் இன்று எப்படி உள்ளது இந்த உலகம் ..? ஆனால் அன்று....
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.
துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது . முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே .இயற்கை மனிதனை வாழவைக்கும் ,செயற்கை அவர்களைக்கொன்றழிக்கும்..முடிந்த அளவுக்கு இயற்கைக்கு மாறுவோம்.
இன்றும் சிலர் இயற்கையான முறையில் தான் தங்கள் அழகை பேணி காகின்றனர். இயற்கை உணவுகளை தேடி சென்று தரம் பார்த்து வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.