ஒரே ஒரு "போன் கால்" போதும்..! வீடு தேடி வரும் காய்கறி...!

By ezhil mozhiFirst Published Apr 8, 2020, 7:24 PM IST
Highlights

குழந்தைகள் மற்றும் பெரியபவர்கள் உள்ள வீட்டில், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர பயம்  ஏற்பட்டு உள்ளது. அதன் படி, மக்களுக்கு ஏதுவாக நடமாடும் காய்கறி திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு  உள்ளது.

ஒரே ஒரு "போன் கால்" போதும்..! வீடு தேடி வரும் காய்கறி...! 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆரம்பத்தில் காவலர்களுக்கு பயந்து வீட்டில்  இருந்தவர்கள் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருக்க பழகி விட்டனர்.

இருந்த போதிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மட்டும் எந்த சிக்கலும் வந்துவிட கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஒரு நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. எனவே சென்னை மக்கள் மத்தியில் ஒரு விதமான பதற்றம் நிலவுகிறது 

குழந்தைகள் மற்றும் பெரியபவர்கள் உள்ள வீட்டில், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர பயம்  ஏற்பட்டு உள்ளது. அதன் படி, மக்களுக்கு ஏதுவாக நடமாடும் காய்கறி திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது 100 வாகனங்கள் மூலம் காய்கறிகளை மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர காய்கறிகளை ஆர்டர் செய்வதற்கு மொபைல் எண்ணையும் வழங்கி உள்ளனர். அதன் படி 9025653376 என்ற எண்ணிற்கு போன் செய்து நமக்கு தேவையான காய்கறிகளையும், எத்தனை கிலோ வேண்டும் என்பதனையும் முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது.

மேலும் என்ற இணையத்தில் லாகின் செய்து,ரூ.250 செலுத்தியும் தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆர்டர் செய்யும் காய்கறிகளை வீடு தேடி வந்து கொடுக்க சிறப்பு ஏற்பாட்டையும் செய்து உள்ளது அரசு.
 
வரும் நாட்களில் சமூக விலகல் தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள  முடியும் என்பதனை நாம் புரிந்துக்கொண்டு அரசுடன் கைகோர்த்து செல்ல வேண்டும்.

click me!