
ஆபீஸ், வீடுன்னு பிஸியா இருக்கறதால நம்மில் பலருக்கும் ஜிம்முக்கு போக நேரமே இருக்காது. அதனால இப்போ நிறைய பேர் வீட்டுலயே ஒரு சின்ன ஜிம் செட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த லிஸ்ட்ல முதல்ல வர்றது ரெண்டே ரெண்டு மெஷின்தான் வாக்கிங் பேட் மற்றும் டிரெட்மில்.
பார்க்க ரெண்டும் ஒன்னுபோல இருந்தாலும், அதுங்க வேலை, விலை, வசதின்னு நெறைய வித்தியாசம் இருக்கு. அதனால, வாங்குறதுக்கு முன்னாடி உங்களுக்கு எது சரின்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம்.
வாக்கிங் பேட் ரொம்ப ஸ்லிம்மாகவும், சின்னதாவும் இருக்கும். இதை மடிச்சு கட்டிலுக்கு அடியிலயோ, சோஃபாவுக்கு பக்கத்துலயோ ஈஸியா வெச்சுடலாம். சின்ன ஃப்ளாட்ல இருக்கறவங்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ். ஆனா, டிரெட்மில் ரொம்ப பெருசா, வெயிட்டா இருக்கும். மடிக்க முடிஞ்சாலும், அதுக்குன்னு தனியா ஒரு இடம் ஒதுக்க வேண்டியிருக்கும்.
வாக்கிங் பேட் முக்கியமா நடக்குறதுக்கும், மெதுவா ஜாகிங் பண்றதுக்கும்தான் சரிவரும். இதுல ஹார்ட் ரேட் மானிட்டர் மாதிரியான அட்வான்ஸ்டு வசதிகள் பெருசா இருக்காது. ஆனா டிரெட்மில்ல ஓடலாம், வேகமா ஸ்ப்ரின்ட் பண்ணலாம், இன் மோட்ல பயிற்சி செய்யலாம். இதுல டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ரீ-செட் ஸ்பீக்கர்னு எல்லா வசதிகளும் இருக்கும்.
விலை எப்படி?
பட்ஜெட் விஷயத்துல வாக்கிங் பேட் ரொம்பவே மலிவானது. ஒரு நல்ல வாக்கிங் பேடை குறைஞ்ச விலையிலயே வாங்கிடலாம். ஆனா, டிரெட்மில் விலை கொஞ்சம் அதிகம். நல்ல பிராண்ட், அதிக வசதிகள் வேணும்னா விலை இன்னும் அதிகமாகும்.
எதுல என்ன பலன்?
ஒரு நாளைக்கு இவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கணும், எடையை கண்ட்ரோலா வெச்சுக்கணும், இல்ல சுகரை கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு வாக்கிங் பேட் ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். ஆபீஸ் வேலை பார்க்கும்போதே அது மேல நடக்கலாம். முட்டி, இடுப்பு வலி இருக்கறவங்களுக்கும் இதுல லேசா ஒர்க்அவுட் பண்ணலாம்.
ஆனா, நீங்க சீரியஸா கொழுப்பைக் குறைக்கணும், ஸ்டாமினாவை அதிகரிக்கணும், இல்ல ஓட்டப் பயிற்சி செய்யணும்னு நினைச்சா, டிரெட்மில் வாங்குறதுதான் சரி. வசதிய வெச்சு மலையேற்றம் மாதிரி பயிற்சி செய்யலாம். டிரெட்மில் அதிக எடை தாங்கும் திறன் கொண்டதால, குடும்பத்துல எல்லாரும் பயன்படுத்தலாம்.
அப்போ கடைசியா எதை வாங்குறது?
சிம்பிளான கணக்குதான். உங்ககிட்ட இடம் கம்மியா இருக்கு, பட்ஜெட் குறைவு, சும்மா வாக்கிங் பழக்கத்தை உருவாக்கினா போதும்னு நினைச்சா, வாக்கிங் பேட் வாங்குங்க. இல்ல, ஜிம்ல பண்ற மாதிரி ஹெவியா ஒர்க்அவுட் பண்ணனும், வேகமா எடையைக் குறைக்கணும், அட்வான்ஸ்டு வசதிகள் வேணும்னு நினைச்சா, கண்ணை மூடிட்டு டிரெட்மில் வாங்குங்க.
வாங்குறதுக்கு முன்னாடி இந்த 3 விஷயத்தை கவனிங்க:
மெஷின் வாங்குறதுக்கு முன்னாடி அதோட மோட்டார் பவரை கண்டிப்பா பாருங்க. அடுத்து, மெஷினோட எடை தாங்கும் திறனை செக் பண்ணுங்க. வீட்டுல இருக்குறவங்கள்ல அதிக எடை கொண்ட நபரோட எடையை விட 10-15 கிலோ அதிகமா தாங்குற மெஷினா வாங்குறது நல்லது. கடைசியா, மோட்டார் மற்றும் ஃபிரேமுக்கு வாரண்டி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.
ரெண்டு மெஷினுமே வீட்டுல ஃபிட்டா இருக்கறதுக்கு சூப்பரான ஆப்ஷன்தான். வாக்கிங் பேட் உங்களுக்கு தினமும் நடக்குற பழக்கத்தைக் கொடுக்கும், டிரெட்மில் ஒரு புரொஃபஷனல் லெவல் ஒர்க்அவுட்டை கொடுக்கும். அதனால, உங்க பட்ஜெட், இடம், மற்றும் ஃபிட்னஸ் இலக்கை மனசுல வெச்சு சரியான முடிவை எடுங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.