Valentine's Week List 2024: இன்று முதல் 'காதல் வாரம்' ஆரம்பம்..! இந்த 7 நாட்களின் சிறப்புகள் இதோ!!

Published : Feb 07, 2024, 11:52 AM ISTUpdated : Feb 07, 2024, 07:45 PM IST
Valentine's Week List 2024: இன்று முதல் 'காதல் வாரம்' ஆரம்பம்..! இந்த 7 நாட்களின் சிறப்புகள் இதோ!!

சுருக்கம்

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரோஸ் டே முதல் காதலர் தினம் வரை முழுமையான பட்டியலைப் பார்க்கலாம்..

பிப்ரவரி என்பது காதலின் மதம். பிப்ரவரியில் காதலர் தினம் கொண்டாடப்படுவதால் இம்மாதத்தில் குளிர்ந்த காற்றோடு காதல் கலந்து இருக்கும். ரோமானிய பாதிரியரான செயிண்ட் வாலன்டைன் காதலை ஆதரிக்கும் போது தனது உயிரே தியாகம் செய்தார். அதன் பிறகு காதலர் தினம் அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இருப்பினும் காதலுக்கு ஒரு நாள் போதாது என்பதால் அந்த வாரம் முழுவதையும் காதலுக்காகவே அர்ப்பணித்தனர் காதலர்கள். காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே காதல் கொண்டாட்டம் தொடங்குகிற.து வாரம் முழுவதும் கொண்டாடப்படும் காதல் நாட்கள் காதலர் வாரம் என்று அழைக்கப்படுகின்றன. அதில் ஒவ்வொரு நாளும் அன்பை ஊக்குவிக்கவும், வெளிப்படுத்தவும், உறவை வலுப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கிறது. காதலர் வாரத்தின் தேதி தாள் வந்துவிட்டது. 

பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை காதலர் வாரத்தில் வெவ்வேறு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், காதலர் தின வாரத்தில் எந்தெந்த நாட்கள் வரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டே: காதல் வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. அதாவது இன்று தான் ரோஸ்ட் டே கொண்டாடப்படுகிறது. காதல் நிறைந்த வாரம் ரோஜாக்களின் வாசனை மற்றும் அழகுடன் தொடங்குகிறது. காதலன் ஒருவன் தன் காதலிக்கு சிவப்பு ரோஜா கொடுத்து தன் காதலை வெளிப்படுத்துகிறான். அதுபோல், இந்த நாளில், காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 8ஆம் தேதி ப்ரபோஸ் டே: காதல் வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரொபோஸ் டே. இது 8ஆம் தேதி அன்று அதாவது நாளைக் கொண்டாடப்படுகிறது. இது அன்பின் வெளிப்பாட்டின் நாள். இந்நாளில் நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் இதயபூர்வமான உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால், இதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது.. நீங்கள் ஒருவருடன் உறவில் இருந்தால் உங்கள் துணைக்கும் ஒரு சிறப்பு வழியில் ப்ரொபோஸ் செய்து, உறவை முன்பை விட வலுவாகவும் உற்சாகமும் மாற்றலாம்.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்தை சிறப்பாக இருக்க.. உங்கள் ராசிக்கு ஏற்ப இந்த நிறங்களில் ஆடை அணியுங்கள்!

பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே: றவில் காதல் எப்போதும் இனிமையாக இருப்பதே உறுதி செய்ய காதலர் வாரத்தின் 3வது நாளில் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி அன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சாக்லேட் கொடுத்து தங்கள் உறவில் இனிமேல் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

பிப்ரவரி 10ஆம் தேதி டெடி டே: டெடி போலவே இதயமும் மென்மையானது. மென்மையான இதயம் ஒரு குழந்தையை போன்றது. டெடியைக் கொடுத்து ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்த முடியும். காதலர் வாரத்தில் நான்காவது நாள், அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. எனவே, இந்நாளில், நீங்கள் விரும்பும் ஒருவருக்கு அல்லது உங்கள் துணைக்கு டெடி பியர் பரிசாக கொடுக்கலாம்.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்திற்கு உங்க லவ்வருக்கு ராசிப்படி பரிசு கொடுங்க.. அன்பு மழை பொழியும்..!!

பிப்ரவரி 10ஆம் தேதி பிராமிஸ் டே: நீங்கள் ஒரு உறவில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் துணைக்கு வாக்குறுதிகளை அளிக்கலாம். அந்த வாக்குறுதிகளை எப்போதும் எங்கு வேண்டுமானாலும் ஒருவருக்கொருவர் அளிக்கலாம். ஆனால் காதலர் தினத்தின் ஐந்தாவது நாள் அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி தான் சிறப்பு வாக்குறுதி நாள். இது பிராமிஸ் டே தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலர்கள் அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் ஒரு சிறப்பு வாக்குறுதியை அளிக்கிறார்கள்.

பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே: அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஹக் டே கொண்டாடப்படுகிறது. காதலில் ஒரு மாய அரவணைப்பு உண்மையில் மாயாஜாலமாக வேலை செய்யும். நீங்கள் விரும்பும் நபரை கட்டிப்பிடிப்பதன் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஒரு அரவணைப்பு உங்கள் இதயத்தை அன்பின் துடிப்பை தவிர்க்கும். எனவே, இந்த நாளில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்புடன் அரவணைத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிப்ரவரி 13ஆம் தேதி கிஸ் டே: உணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் தொடுவதன் மூலம் வெளிப்படுத்தலாம் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளை விட ஒரு முத்தம் சிறந்த வழியாகும். முத்த தினம் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம்: காதல் வாரத்தின் கடைசி நாளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தம்பதிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் அனைத்து ஜோடிகளும் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்கள், பரிசுகளை வழங்குகிறார்கள் மற்றும் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமாக காதலர் தினத்தை துணையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் போது தான் காதலில் வெற்றி அடைந்தீர்களா என்பது இன்று தான் தெரியும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்