கொரோனாவை தடுக்க "குடைப்பிடிப்பது கட்டாயம்"..! அதிரடி தீர்ப்பு கொடுத்த "கிராம பஞ்சாயத்து"! பிரபலமாகும் "செம்ம ட

By ezhil mozhiFirst Published Apr 27, 2020, 12:40 PM IST
Highlights

கோடைகாலம் என்பதால் அதிக வெயில் நிலவுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு இருக்கும் தருணத்தில் மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியில் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது, சமூக விலகலை கடைப்பிடிப்பதில் தவற விடுகின்றனர்.  

கொரோனாவை தடுக்க "குடைப்பிடிப்பது கட்டாயம்"..! அதிரடி தீர்ப்பு கொடுத்த "கிராம பஞ்சாயத்து"! பிரபலமாகும் "செம்ம டெக்னிக்"..!  

கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டியது மிக மிக அவசியம் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் இன்றளவும் மக்கள் ஆங்காங்கே திடீரென கூடுவதும், அத்தியாவசிய தேவைகளுக்காக உணவுப் பொருட்களை வாங்கும்போது அருகருகே நிற்பதும் பார்க்க முடிகிறது.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால், அசைவ உணவு பொருளை வாங்குவதற்கு கூட்டமாக மோதிக் நிற்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், கேரளாவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர்முக்கோம் என்ற பகுதியில் யார் எங்கு சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. இதற்காக மலிவு விலையில் அங்குள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் குடை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோடை காலமும்/ கொரோனவும் 

கோடைகாலம் என்பதால் அதிக வெயில் நிலவுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு இருக்கும் தருணத்தில் மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியில் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது, சமூக விலகலை கடைப்பிடிப்பதில் தவற விடுகின்றனர்.  

இதற்காக குடைபிடித்து செல்வதன் மூலம் ஒருவர் மற்றவரை தொடுவது தவிர்க்கப்படும் என்றும், கோடை வாயிலில் இருந்து பாதுகாக்கவும், ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளி கடைபிடிக்க முடியும் என்பதற்காகவும் கேரளாவில் இந்த முறை மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து வருகிறது. மேலும் மற்ற மாநில மக்களும் இதே முறையை பின்பற்றினால், சமுக விலகல் கடைபிடிக்க முடியும் என்கின்றனர் மக்கள் 

click me!