2 தங்க சுரங்கம் கண்டுபிடிப்பா..? வேகமாக பரவும் வதந்தி..!

By ezhil mozhiFirst Published Feb 22, 2020, 4:15 PM IST
Highlights

இந்திய புவியியல் அளவை நிறுவனத்திற்கு தெரியாமல், 20 ஆண்டுகளுக்கு முந்தைய தகவலை எடுத்து, உத்தரப் பிரதேச மாநில அரசு தன்னிச்சையாக ஊடகங்களுக்கு தெரிவித்ததே இந்த வதந்தி பரவ முக்கிய காரணமாகும். 

2 தங்க சுரங்கம் கண்டுபிடிப்பா..? வேகமாக பரவும் வதந்தி..!

உத்திரபிரதேச மாநிலத்தில் 3350 டன் அளவு கொண்ட இரண்டு தங்க சுரங்கங்கள் கண்டு பிடித்துள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்திய புவியியல் அளவை நிறுவனம் (GSI) மறுப்பு தெரிவித்து ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ‘’குறிப்பிட்ட சோன்பத்ரா பகுதியில் இவ்வளவு தங்கம் உள்ளதாக ஊடகங்களுக்கு நாங்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதைச் சொன்னது உத்தரப் பிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகமாகும். சோன்பத்ரா மாவட்டத்தில் ஏற்கனவே பல முறை விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக, அங்கே சுமார் 160 கிலோ தங்கம் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் சொல்வது போல அப்பகுதியில் 3350 டன் தங்கம் எதுவும் இல்லை,’’ என்று கூறப்பட்டுள்ளது.

வதந்தி பரவ காரணம் என்ன..?  

இந்திய புவியியல் அளவை நிறுவனத்திற்கு தெரியாமல், 20 ஆண்டுகளுக்கு முந்தைய தகவலை எடுத்து, உத்தரப் பிரதேச மாநில அரசு தன்னிச்சையாக ஊடகங்களுக்கு தெரிவித்ததே இந்த வதந்தி பரவ முக்கிய காரணமாகும். அங்கு, 30 லட்சம் டன் தங்கமும் இல்லை; 3000 டன் தங்கமும் இல்லை; இருப்பது 160 கிலோ வரை மட்டுமே என்று உறுதியாகிறது.

click me!