
தமிழர் திருநாளாம் தை பொங்கல், தமிழகத்தில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எல்லா ஆண்டும் பொங்கல் திருநாளில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானிடம் வழிபட்டு உண்பது வழக்கம். ஆனால், இன்றைய நவீன வாழ்கை முறையில் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றனர். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா என்கின்ற கொடிய நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளை சாப்பிடுவது சிறந்து.
அப்படியாக, இந்த ஆண்டு நாம் ஆரோக்கியமான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வதற்கு சிறுதானிய பொங்கல் தேவையான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகின்றது. சிறுதானியங்களை மையமாக வைத்து, இது போன்ற ஆரோக்கியமான பொங்கலை தயார் செய்யலாம். ஏனெனில், சிறுதானியங்களில் 25 சதவீத புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. அதோடு வைட்டமின் ‘ஈ’ வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவைகள் நிறைந்துள்ளன. கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான சிறுதானிய வெண் பொங்கல் வைப்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
திணை – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -7 கப்
வெல்லம் – தேவையான அளவு
நெய்- 3 டீஸ்புன்
இஞ்சி- 1 டீஸ்புன்
மிளகு பொடி - 1டீஸ்புன்
ஏலக்காய் – 4
கருவேப்பிலை - சில இலைகள்
தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்
முந்திரி பருப்பு – 10
செய்முறை:
திணை மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து அலசி எடுத்து கொள்ளவும்.
பிறகு ஒரு குக்கரில் செய்வதற்கு, 7 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு திணை மற்றும் பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு தேவையான அளவு உப்பு போட வேண்டும். பிறகு குக்கரில் 5 விசில் விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். பிறகு மற்றொரு தாளிப்பு பாத்திரத்தில் நெய்- 3 டீஸ்புன்
இஞ்சி- 1 டீஸ்புன், மிளகு பொடி - 1டீஸ்புன், தேவையான அளவு கருவேப்பில்லை போட்டு முந்திரி சேர்த்து தாளித்து விட வேண்டும். பிறகு ஒன்றாக கலந்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் வெள்ளம் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.