
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 72 லட்சம் குழந்தைகள் பயன்பெற முடியும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். பொதுமக்கள் பயணம் மேற்கொண்டால் கூட, பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சொட்டு மருந்து விட அமைக்கப்படும் சிறிய முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, நாளைய தினத்தில் மறக்காமல் தங்களுடைய குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விடுங்கள் பயன்பெறுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.