
கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இறக்கத்துக்கு செல்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.8 ரூபாய் உயர்ந்து, ரூ. 36,096 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து, ரூ.4,512 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை எந்தவித மாற்றம் இல்லாமல் ரூ 65.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலையும் மாற்றமில்லாமல் ரூபாய் 65,500க்கு விற்பனை ஆகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.