மூளை செயல்பாடு அதிகரிக்க "தோப்புக்கரணம்"..! பிரபலமாகவும் "பிரெயின்" யோகா...!

By ezhil mozhiFirst Published Nov 29, 2019, 1:54 PM IST
Highlights

தோப்புக்கரணம் போடு என்றுதான்.. ஆனால் அது மிகப்பெரும் தண்டனையாக பார்க்கப்பட்டது 
அந்த காலத்தில். அவ்வாறு போடச் சொல்வதற்கு பின் எப்படிப்பட்ட அறிவியல் உண்மை இருக்கிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

மூளை செயல்பாடு அதிகரிக்க "தோப்புக்கரணம்"..! பிரபலமாகவும் "பிரெயின்" யோகா...! 

நமது இரண்டு பக்க மூளையும் திறம்பட செயல்பட வேண்டுமெனன்றால் நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று என்ன தெரியுமா? பள்ளி பருவத்தில் ஏதாவது குறும்பு செய்தாலும், தவறு செய்தாலும் நமது ஆசிரியர் செய்ய சொல்வது என்ன தெரியுமா..? 

தோப்புக்கரணம் போடு என்றுதான்.. ஆனால் அது மிகப்பெரும் தண்டனையாக பார்க்கப்பட்டது அந்த காலத்தில். அவ்வாறு போடச் சொல்வதற்கு பின் எப்படிப்பட்ட அறிவியல் உண்மை இருக்கிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

கைகளை மாற்றி காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும் போது நம்முடைய இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்யும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாகவே மூளையை பொருத்தவரை வலப்பக்க மூளை நன்கு வேலை செய்தால் நமது உடல் இடப்பக்க உறுப்புகள் அனைத்தும் மிக சிறப்பாக செயல்படும்.

 

அதே போன்று நமது மூளை இடது பக்க மூளை நல்ல செயல்முறையில் இருந்தால் நம் உடலின் வலது பக்கம் மிக சிறப்பாக செயல்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. பொதுவாக உடற்பயிற்சி செய்தால் இடது மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். யோகா செய்தால் மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இருபக்கமும் திறம்பட செயல்பட வேண்டும் என்றால் இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியம். அவ்வாறு செயல்படுத்த முடியாத ஓர் தருணத்தில் தினமும் 50 தோப்புக்கரணம் போட்டாலே போதுமானது.

மேற்கத்திய நாடுகளில் பிரைன் யோகா என்ற பெயரில் தோப்புகரணம் மிகவும் பிரபலமாக இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் யோகா எந்த அளவுக்கு நம்  உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என்பதை நாம் உணர வேண்டும்

click me!