
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் அதிக வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
அதாவது , மார்ச் மாதம் தொடங்கிய போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது இந்நிலையில் பொதுவாகவே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படும்.
அதற்கேற்றவாறு இந்த மாத தொடக்கத்தில் பல இடங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் நிலவியது.
அதாவது கடந்த 2 ஆம் தேதியன்று , தமிழகத்தின் ஓன்பது நகரங்களில் 100 டிகிரி பாரன் ஹுட் அளவுக்கு வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், அடுத்து வரும் 3 மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அதனால் பல உயிர் இழப்புகள் கூட ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது .
எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை , வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.