எதைத்தான் நம்புவது? கர்பத்திலும் போலியா?

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
எதைத்தான் நம்புவது? கர்பத்திலும் போலியா?

சுருக்கம்

There is also fake in this matter?

பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து கருதரித்ததும்,அது சாதாரண கர்ப்பமாக உருவாவதுதான் இயல்பு. அப்படிக் கருத்தரித்த கருவானது, சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தால், அது தான், 'முத்துப்பிள்ளை கர்ப்பம் 'என்றழைக்கப்படுகிறது.

முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது; இவ்வகை கர்ப்பத்தில் கருவே இருக்காது. நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். மற்றொன்று, 'பார்ஷியல்' எனப்படுகிற பகுதி;முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், ஒரு அசாதாரண கரு உருவாகியிருக்கும்,ஆனால் அது பிழைக்காது. நஞ்சிலும் கொஞ்சம் சாதாரணமானதும்,கொஞ்சம் அசாதாரணமானதுமான திசுக்கள் காணப்படும்.

மரபணு கோளாறு முதல் காரணம். 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கு முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட, இருமடங்கு வாய்ப்புகள் அதிகம்; அதுவே, 40 வயதுக்கு மேல், ஐந்து மடங்கு வாய்ப்புகள் அதிகம்.

முதலில் ஒரு முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால், அடுத்த கர்ப்பமும் அப்படியே உருவாக, 1.2 முதல் 1.4 சதவீதம் வரை வாய்ப்புண்டு.

 அதுவே இரண்டாவது முறையும் முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால், மூன்றாவது கர்ப்பமும் அப்படியே நிகழ, 20 சதவீதம் வாய்ப்புண்டு.

சாதாரண கர்ப்பத்தை போலவே மாதவிலக்கு தள்ளிப்போகும்; அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். 90 முதல் 95 சதவீதப் பெண்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்படுவர். சிலருக்கு திராட்சை மாதிரியான குட்டித் திசுக்கள் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். 


இல்லை; சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். 'ஹைப்பர் தைராய்டு' பிரச்னை ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை ஏற்படும்.

முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பத்தை விட, மிகப் பெரியதாக இருக்கும்.

அதாவது மாதவிலக்கு தள்ளிப்போனதில் இருந்து கணக்கிட்டால், கர்ப்பப்பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரியதாக இருக்கும்.

கர்ப்பம் தரித்த பின், ரத்தப் பரிசோதனையின் மூலம்,ஹெச்.சி.ஜி., ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். மேலும், 'ஸ்கேன்' செய்வதன் மூலம் உறுதி செய்யலாம்.

முத்துப்பிள்ளை கர்ப்பத் திசுக்கள் நுரையீரல் உட்பட, எங்கு வேண்டுமானாலும் பரவும் ஆபத்துண்டு. எனவே, 'வாக்குவம்' அறுவை சிகிச்சையின் மூலம், அந்தக் கருவை வெளியே எடுப்பது தான் நல்லது. இச்சிகிச்சையின் போது, அதிக ரத்த இழப்பு ஏற்படும்.

கர்ப்பிணியின் வயது அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்தபின், கர்ப்பப்பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும். அதோடு தொடர் கண்காணிப்பும் அவசியம்.

முத்துப்பிள்ளை கர்ப்பம் புற்றுநோயாக மாறினால், நுரையீரல், கல்லீரல்,மூளை என, எங்கே வேண்டுமானாலும் பரவி, பாதிப்பை ஏற்படுத்தும்;ஆனால் பயப்படத் தேவையில்லை.

கீமோதெரபியின் மூலம், இந்த புற்றுநோயை, 100 சதவீதம் குணப்படுத்த முடியும். கீமோதெரபி கொடுப்பதால் தாய்க்கோ, அடுத்துப் பிறக்கப் போகும் குழந்தைக்கோ பிரச்னை வராது.


ஹெச்.சி.ஜி., அளவு சீரான அளவை எட்டும் வரை, மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஹெச்.சி.ஜி., சீரான அளவு வரும் வரை,சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Induction Cooktop: கேஸ் தட்டுப்பாடா? அவசரப்பட்டு இன்டக்‌ஷன் வாங்காதீங்க! இந்த 5 விஷயத்தை செக் பண்ணுங்க
இலவசமாக துபாயை சுற்றிப் பார்க்கலாம்! மார்ச் மாத ஸ்பெஷல் ஆஃபர்களை வாரி வழங்கும் அமீரகம்