உலகின் மிக விலை உயர்ந்த விஸ்கி இதுதான்: இந்த விலைக்கு சொகுசு பங்களாவே வாங்கிடலாம்!

By Manikanda Prabu  |  First Published Jan 25, 2024, 4:51 PM IST

கிராஃப்ட் ஐரிஷ் விஸ்கி நிறுவனத்தின் The Emerald Isle என்ற விஸ்கி உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது


வரலாற்று ரீதியாக, ஸ்காட்ச் விஸ்கிகள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் விஸ்கியாக உள்ளது. கடந்த நவம்பரில் The Macallan 1926 எனும் விஸ்கி பாட்டில் 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏலம் போனது. இதன் மூலம் உலகின் விலை உயர்ந்த விஸ்கியாக The Macallan 1926 இருந்தது.

இந்த நிலையில், The Macallan 1926 சாதனையை கிராஃப்ட் ஐரிஷ் விஸ்கி நிறுவனத்தின் The Emerald Isle என்ற விஸ்கி முறியடித்துள்ளது. ஒரு பாட்டில் The Emerald Isle விஸ்கியை அமெரிக்க சேகரிப்பாளரான மைக் டேலிக்கு கிராஃப்ட் ஐரிஷ் விஸ்கி நிறுவனம் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.23 கோடியே 27 லட்சத்து 14 ஆயிரத்து 720 ஆகும்.

Tap to resize

Latest Videos

இளம் வயதிலேயே முடி நரைக்குதா..? காரணம் இந்த மோசமான பழக்கங்கள் தான்.. உடனே நிறுத்துங்க..!

இதன் மூலம், ஏற்கனவே உலகின் மிக அரிதான டிரிபிள்-டிஸ்டில்டு சிங்கிள் மால்ட் விஸ்கியாக இருக்கும் The Emerald Isle விஸ்கி, உலகில் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த விஸ்கியாகவும் மாறியுள்ளது.

ஐரிஷ் தான் விஸ்கியின் எதிர்காலம் என மைக் டேலி கூறியுள்ளார். மதுபான சேகரிப்பாளராக குறிப்பாக மதுப்பிரியராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். மைக் டேலி அமெரிக்காவின் மிகச் சிறந்த ஸ்பிரிட் சேகரிப்பாளர்களில் ஒருவர் ஆவார். அவரிடம் ஐரிஷ், அமெரிக்கன் மற்றும் ஸ்காட்ச் விஸ்கிகளின் பல ஆயிரம் பாட்டில்கள் கொண்ட சேகரிப்புகள் உள்ளன.

The Emerald Isle விஸ்கியின் பிரமிக்க வைக்கும் வால்நட் கேஸில், ஒரு பெஸ்போக் ஃபேபர்ஜ் முட்டை, ஒரு ஜோடி கோஹிபா சுருட்டுகள், கைக்கடிகாரம், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.  இவை அனைத்தும் தங்கம், வைரம் மற்றும் ரத்தினங்களால் செய்யப்பட்டவை.

10 நிமிஷத்தில் இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்.. நீங்கள் தயாரா..??

சுமார் 30 வயதான The Emerald Isle  விஸ்கியானது ஒரு அரிய, மூன்று முறை காய்ச்சிய, ஒற்றை மால்ட் ஐரிஷ் விஸ்கியாகும். இதன் பாட்டில் இத்தாலிய ஓவியர் வலேரியோ அடாமி வடிவமைத்த லேபிளால் மூடப்பட்டுள்ளது. The Emerald Isle  விஸ்கி ஒரு கைவினைப்பொருளாக உள்ளதாக craftirishwhiskey.com அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு பாட்டிலிலும் ஃபேபர்ஜ் முட்டை உள்ளது. இது நான்காம் தலைமுறை ஃபேபர்ஜ் ஒர்க்மாஸ்டர் டாக்டர் மார்கஸ் மோர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை 18K தங்கத்தால் ஆனது, இதை உருவாக்க 100 மணிநேரத்திற்கும் மேலாக ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 104 வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளது. அதில் மரகதங்களும் அடங்கும்.

இந்த விஸ்கியுடன் வரும் கைக்கடிகாரத்தில் தங்கம் மற்றும் நகைகள் பதிக்கப்பட்டுள்ளது, இதன் வடிவமைப்பு அனைவரின் கண்களையும் கவரும் வகையில் உள்ளது.

click me!