கொரோனாவால் இறந்தவரை சவக்குழிக்குள் உருட்டிவிடும் அவலம்.!!மரத்துப்போகும் மனிதநேயம்.!!

Published : Jun 06, 2020, 08:10 PM IST
கொரோனாவால் இறந்தவரை  சவக்குழிக்குள் உருட்டிவிடும் அவலம்.!!மரத்துப்போகும் மனிதநேயம்.!!

சுருக்கம்

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மனிதாபிமானமின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் தள்ளிவிட்டுச் செல்லும் கொடுமையான சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மனிதாபிமானமின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் தள்ளிவிட்டுச் செல்லும் கொடுமையான சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த ஒருவர். புதுச்சேரி மூலக்குளம் அருகே கோபாலன்கடை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு வந்திருக்கிறார்.திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே உறவினா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இதைத் தொடா்ந்து, அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

 அந்த நபா் குறித்த தகவல்கள் அரசின் அறிவுறுத்தல்படி, நகராட்சி, காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.பின்னா், உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினா், இறந்த நபரை அடக்கம் செய்ய ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கோபாலன்கடை மயானத்துக்கு கொண்டு சென்றனா். இதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் எதிர்ப்புத் தெரிவித்தனா்.இதனால் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதன்பிறகு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதையடுத்து, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம், வட்டாட்சியா் அருண் அய்யாவு ஆகியோர் முன்னிலையில், இறந்த நபரை உள்ளாட்சித் துறை ஊழியா்கள் அடக்கம் செய்தனா்.முன்னதாக தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த சவக்குழி அருகே சென்ற சுகாதாரப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் இருந்து உடலைக் கவிழ்த்துவிட, இறந்தவரின் சடலம் உருண்டபடி சவக்குழிக்குள் விழுந்திருக்கிறது.சவக்குழிக்குள் சடலத்தைத் தள்ளிவிடும் விடியோ, தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!