
வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத இக்குணத்தை நாயிடம் காணலாம். அதற்கு மற்றொரு உதாரணமாக இன்று சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் டெலிவரி மேனாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் நன்றியுள்ள பிராணியான நாயை வளர்த்து வருகிறார். ஆனால், நாய்க்கு உரிய நேரத்தில் உணவு அளிக்கவும், அவற்றை அன்பாக கவனித்து கொள்ளவும் ஆட்கள் இல்லை.
ஆகையால், தினமும் வேலைக்கு செல்லும் போது தன்னுடன் அழைத்து சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு உணவு டெலிவரி கொடுக்கும் இடங்களில் தன்னுடன் அழைத்து செல்கிறார். இவர் நாய் மீது வைத்த பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.