அய்யோ பாவம்... இவ்வளவு பணமா..? வசமா மாட்டிக்கொண்ட சென்னை மக்கள்..!

By ezhil mozhiFirst Published Aug 23, 2019, 1:57 PM IST
Highlights

பொதுவான அபராத தொகையாக இருந்த ரூபாய் 100 தற்போது புதிய அபராதமாக 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி,  போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் போக்குவரத்து விதிமீறல் ஏற்படும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகை அமலுக்கு வந்துள்ளதால் இது குறித்த முழு விபரம் இங்கே பார்க்கலாம்.

பொதுவான அபராத தொகையாக இருந்த ரூபாய் 100 தற்போது புதிய அபராதமாக 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று,

போலீஸ் உத்தரவை மீறுதல்  - ரூ .500 இலிருந்து ரூ.2000

உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் - ரூ 1,000 இலிருந்து ரூ.5,000    

 தகுதி இல்லாத வாகனம் ஓட்டுதல் - ரூ.500 இலிருந்து ரூ.10,000    

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்  - ரூ.400 இலிருந்து ரூ.2000  

ஆபத்தாக வாகனத்தை ஓட்டுதல் - ரூ 1000 இலிருந்து ரூ. 5000   

 போதையில் வாகனம் ஓட்டுதல் - ரூ  2,000 இலிருந்து ரூ.10,000   

ரேஸில் ஈடுபடுதல் -  ரூ 500 - இலிருந்து ரூ 5000    

பர்மிட் இல்லாத வாகனம் ஓட்டுதல் - ரூ. 5000 இலிருந்து  ரூ.10,000    

அதிக பாரம் ஏற்றுதல் - ரூ.2000 இலிருந்து  ரூ.20,000   

அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் - ரூ 1,000   

சீட் பெல்ட்  - ரூ 100 இலிருந்து  ரூ.1000  

டூவீலரில் 3 நபர் செல்வது - ரூ. 100  இலிருந்து ரூ.1000

ஹெல்மெட்  அணியாமல் செல்வது - ரூ.100 இலிருந்து ரூ.1000

காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுவது - ரூ.1000 இலிருந்து ரூ .2,000

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25,0000 

மேலும் போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தவறு செய்தால் அபராத தொகை இருமடங்காக வசூலிக்கப்படும் என்றும் இந்த உயர்த்தப்பட்ட அபராத தொகை பதினான்காம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே சென்னை மக்களே... உயிர் காக்கும் கவசம் ஹெல்மெட் என்பதை உணர்ந்து மக்கள் கட்டாயம் ஹெல்மெட்  அணிவது நல்லது. இல்லையேல் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.. நாம்  வைத்திருக்கும் பணத்திற்கும் உத்திரவாதம் இல்லை 

click me!