25 நிமிடம் உச்சி வெயிலில் நின்று வாக்களித்த ஸ்டாலின்..! வாழ்த்து தெரிவித்த மக்கள்..!

By ezhil mozhiFirst Published Apr 18, 2019, 10:58 AM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுவையில் விறுவிறுப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் விறுவிறுப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் பிரபலங்கள் 7 மணி முதலே வாக்களிக்க தொடங்கிவிட்டனர். பொது மக்களோடு மக்களாக நின்று வாக்களித்த விதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அந்த வரிசையில் திமுக தலைவர் ஸ்டாலின் 20 நிமிடம் வெயிலில் நின்று தனது வாக்கை செலுத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள வாக்குபதிவு மையத்தில் இன்று காலை 9 மணிக்கு வந்த மு க ஸ்டாலின் ஒன்பது முப்பது மணி அளவில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ஒட்டு மொத்த வாக்காளர்கள் தங்களது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது சாதாரண தேர்தல் அல்ல. மிக முக்கியமான தேர்தல். எனவே எதிர்காலத்தை தீர்மானிக்க சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

20 நிமிடம் வெயிலில் நீண்ட வரிசையில் மக்களோடு ஒரு சாதாரண மனிதராக நின்று வாக்களித்த ஸ்டாலினுக்கு அங்கிருந்த மக்கள்  ஆதரவு தெரிவித்த வண்ணம் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

click me!