இந்தியருக்கு லாட்டரியில் ரூ. 29 கோடி பரிசு..! போனில் தொடர்பு கொள்ள முடியாததால் லோலோன்னு தேடி வரும் நிறுவனம்..!

Published : Nov 04, 2019, 12:49 PM IST
இந்தியருக்கு லாட்டரியில் ரூ. 29 கோடி பரிசு..! போனில் தொடர்பு கொள்ள முடியாததால் லோலோன்னு தேடி வரும் நிறுவனம்..!

சுருக்கம்

ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்ற நபருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 29 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியருக்கு லாட்டரியில் ரூ.29 கோடி பரிசு..! போனில் தொடர்பு கொள்ள முடியாததால் லோலோன்னு தேடி வரும் நிறுவனம்..!   

அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிலையில் இதன் மூலம் ரூபாய் 29 கோடி பரிசு பெற்ற இந்தியரை இந்த நிறுவனம் தேடி வருகிறது.

இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கிய பல இந்தியர்கள் பல கோடிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கடந்த மாதம் மங்களூரை சேர்ந்த முகமது பயஸ் என்பவருக்கு 23 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்த குலுக்களிலும் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பரிசு கிடைத்துள்ளது. ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்ற நபருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 29 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயர் என பெயர் கொண்டதால் கேரளாவை சேர்ந்தவர் என கணிக்கப்பட்டு அவரை தொடர்ந்து தேடி வருகிறது இந்த நிறுவனம். லாட்டரி சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்கு போன் செய்து கேட்டால் வேறு ஒரு நபருக்கு போன்கால் செல்வதாகவும் மற்றும் வேறு நம்பருக்கு போன் செய்தால் அந்த நபர் அங்கு இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஸ்ரீனு ஸ்ரீதரன் எங்கு உள்ளார் என தீவிரமாக தேடி வருகிறது இந்த நிறுவனம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து