சொக்கி இழுக்கும் "சொட்டு மருந்து சாராயம்"...! 48 மணி நேரமும் போதையில் மிதக்கும் வேலூர் குடிமகன்கள்..!

 
Published : Jun 28, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
சொக்கி இழுக்கும் "சொட்டு மருந்து சாராயம்"...! 48 மணி நேரமும் போதையில் மிதக்கும் வேலூர் குடிமகன்கள்..!

சுருக்கம்

sotu marunthu saaraayam in vellore is the most developing business now

சொக்கி இழுக்கும் சொட்டு மருந்து சாராயம்...! 48 மணி நேரமும் போதையில் மிதக்கும் வேலூர் குடிமகன்கள்..!

இதுவரை மதுபானங்கள் என்ற வார்த்தை மட்டுமே கேள்வி பட்டிருப்போம்...இன்னும் அதிகம் போனால் சாராயம் என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்போம் அல்லவா..?

அப்படி என்றால் அது என்ன சொட்டு மருந்து சாராயம்..? ஆமாம் இதில் என்ன சுவாரசியம் என்று பார்க்கலாம் வாங்க..வேலூர் மாவட்டத்தில் உள்ளது உமாராபாத். இந்த பகுதியை சுற்றி உள்ள சுமார் 20 கும் மேற்பட்ட கிராமங்களில் தான் சொட்டு மருந்து சாராயம்  தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம்  உள்ளன.

எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா .?

100 மிலி தண்ணீரில் கண்ணுக்கு விடும் சொட்டு மருந்தை கலந்து நன்கு காய்ச்சுவார்களாம். பின்னர் அது நன்கு பொங்கி அடங்கிவிடுமாம்

அதில் கட்டுப்புகையில் சேர்த்து மண்ணில் புதைத்து வைத்து, சில நாட்கள் கழித்து வெளியில் எடுத்த உடன், அதில் கொஞ்சம் புகையிலை கலந்து விடுவார்களாம்

இந்த திரவம் வெள்ளை நிறமாக மாற மேலும் ஒரு ரசாயனத்தை கலந்து விடுவார்களாம். இதற்கு பெயர் தான் சொட்டு மருந்து சாராயம்.

விலை எவ்வளவு தெரியுமா..?

35 லிட்டர் கேன் - 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து சாராயத்தை அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்து நிகழ்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்வது வழக்கமாக வைத்து உள்ளனர்

இதே போன்று ஒரு லிட்டர் விலை 200 ரூபாய். இதில் 100 ml வீதம் சிறு பாக்கெட் செய்து, ஒரு பாக்கெட் வீதம் 20 ரூபாய்க்கு விற்று வருகிறார்களாம்.

இதனை தயாரிக்கும் செலவு என்னமோ குறைவு தான்..ஆனால் லாபம் பெருமளவு என்பதால், அங்குள்ள பல வீடுகளில் இது ஒரு தொழிலாகவே செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டாலும், போலீசாரை தன் கைக்குள் வைத்துக்கொண்டு வியாபாரத்தை அமோகமாக நடத்தி வருகிறார்களாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்