எப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..!

By ezhil mozhiFirst Published Oct 5, 2019, 2:10 PM IST
Highlights

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பாக பேச வைத்தது. நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்கம் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்தனர். 

எப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..! 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கொள்ளையனை பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பாக பேச வைத்தது. நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்கம் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்தனர். அவர்கள் வடமாநிலத்தை வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்பட்டது. பின்னர் இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு 7 தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களிலும் பல கோணங்களிலும் விசாரணை துரிதப்படுத்த பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவாரூரில் விளமல் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை வழிமறித்த போது, நிற்காமல் மிகவும் வேகமாக சென்று உள்ளது. இதனை கண்ட உதவி ஆய்வாளர் நேரு உடனடியாக தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தி உள்ளார்.

பின்னர் மிகவும் வேகமாக சென்ற கொள்ளையர்கள் அங்கு ஒரு சில சிறு வழிகளையும் பயன்படுத்தி நுழைந்து நுழைந்து சென்றுள்ளனர். இருந்தபோதிலும் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து சென்று ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டி சென்ற மணிகண்டனை படித்தார். பின்னர் பின்புறம் அமர்ந்து இருந்த சுரேஷ் என்பவர் எப்படியோ தப்பி ஓடிவிட்டார். அவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளார் நேரு .ஆனால் மணிகண்டன் பிடிபட்ட பின் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நகைகளின் பார் கோடுகளை வைத்து பார்க்கும்போது... அது திருச்சி நகை கடையில் இருந்து திருடப்பட்டது என்பது உறுதியானது.

இவருடன் சென்ற சுரேஷ் என்பவர் ஏற்கனவே இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் நடத்தப்பட்ட பல்வேறு கொள்ளைகளில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக திருவாரூர் முருகன் தான் இதுபோன்ற பல முக்கிய திருட்டு சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் இதில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளான கோபால், காளிதாஸ், தினகரன், லோகநாதன் மற்றும் ரகு ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எது எப்படியோ திருடுபோன ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் இப்படி ஒரு பெரிய கொள்ளை கும்பலை கண்டுபிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகமுக்கியமாக துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் நேருவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெரும் கொள்ளை கும்பலை பிடிப்பதற்கு மிக முக்கிய தூணாக இருந்தவர் பாரத நேரு என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!