அக்டோபர் 26 ஆம் தேதி 8.30 முதல் 5.50 மணி வரை..! எதை செய்ய கூடாது தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Oct 7, 2019, 4:40 PM IST
Highlights

அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு 11 ரூபாய் காணிக்கையாக செலுத்தி விட்டு வருவதும் சிறந்தது.

அக்டோபர் 26 ஆம் தேதி 8.30 முதல் 5.50 மணி வரை..! எதை செய்ய கூடாது தெரியுமா..? 

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் ஜோதிடம் பார்த்து, நாள் நட்சத்திரம் பார்த்து செய்யும் பழக்கம் கொண்டவர்கள் ஏராளம். 

ஏன் எதற்காக இப்படி நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறார்கள் என்றால் அதற்கு பின் பதில் அளிக்க முடியாத அளவிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உண்மை சம்பவங்கள் இருக்கின்றன.. வரலாற்று உண்மைகள் எவ்வளவோ இருக்கிறது.. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 12 ராசியினருக்கு ஏற்ற வகையில் தினம் தினம் ராசி பலன் பார்க்க முடிகிறது; ஏதாவது நம் வாழ்க்கையில் தடங்கல் வந்தால் உடனே நாம் நினைப்பது நேரம் சரியில்லையோ என்பதே... இப்படியெல்லாம் இருக்கும் போது ஒரு சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் எதிலும் ஈடுபட கூடாது என்கிறது பணவளக்கலை.

அதன்படி இந்த அக்டோபர் மாதத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட நாளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அக்டோபர் 26ஆம் தேதி அதாவது ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை அஸ்த நட்சத்திரம் வருகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நாளில் காலை 8.30 மணி முதல் 5 50 மணி வரை எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், எந்த ஒரு புதிய திட்டத்தை தீட்டுவதாக இருந்தாலும், எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் தள்ளிவைப்பது நல்லது.

ஒருவேளை அந்த குறிப்பிட்ட நாளில் தான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் நீங்கள் இருந்தால், அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய ஒரு விஷயம் பிள்ளையாரை வணங்கிவிட்டு நீங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் செய்யலாம்

அதற்கு முன்னதாக அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு 11 ரூபாய் காணிக்கையாக செலுத்தி விட்டு வருவதும் சிறந்தது. அன்றைய தினத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பதால் எந்த ஒரு நல்ல முடிவை எடுப்பதாக இருந்தாலும் இந்த ஒரு நாளில் இந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர்ப்பது நல்லது. 
 

click me!