சென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..!

Published : Nov 27, 2020, 11:27 AM IST
சென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..!

சுருக்கம்

சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பள்ளங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன.   

சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பள்ளங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால்  அனைத்து நீர்நிலைகளும் பெருகின. இதனால் பாம்புகள் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக 123 அழைப்புகள் வந்தன.

இதையடுத்து கிண்டி வனத்துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோல் வரையன் பாம்புகள், பச்ச பாம்புகள் உள்ளிட்ட 100 பாம்புகள் பிடிப்பட்டன. பிடிக்கப்பட்ட பாம்புகள் காப்பு காடுகளில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் பாம்புகள் வீடுகளுக்குள் பதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலுக்கு இதமான 6 சூப்பர் பானங்கள்! உடனே டிரை பண்ணுங்க!
புகையும் இல்லை.. செலவும் இல்லை..! சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு செக் வைத்த 'ராக்கெட் அடுப்பு'..