சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் அடுத்த அதிரடி !! கலக்கப் போகும் தீபாவளி விளம்பரம் !!

Published : Sep 17, 2018, 10:51 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் அடுத்த அதிரடி !! கலக்கப் போகும் தீபாவளி விளம்பரம் !!

சுருக்கம்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி எதிர்வரும் தீபாவளிக்காக சின்னத்திரை நடிகைகள் மற்றும் சிரிச்சா போச்சு டீமுடன் இணைந்து புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். இது விரைவில் டிரெண்டிங் ஆகும் என எதிர்பாக்கப்படுகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், ஹன்சிகா - தமன்னாவுடன் நடித்த விளம்பரம், 'பெஸ்ட் பெஸ்ட்' என டான்ஸ் ஆடிய விளம்பரம், ஆறு கெட்டப்பில் ஃபாரின் அழகிகளுடன் நடித்த விளம்பரம் என அவர் நடித்த அனைத்து விளம்பரங்களும் சமூக வலைதளத்தில் செம வைரல் ஆனது.

அவர் நடித்த விளம்பரங்களை கூட் மீம்ஸ் கிரியேட்டர்கள் செமையாய் கலாய்திருந்தாகள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் தொடர்ந்து அவருடைய கடை விளம்பரத்தில் தோன்றி நடித்து வந்தார்.

இந்நிலைடயில் அடுத்து தீபாவளி வரப் போகுது. அதற்கான விளம்பர ஷுட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் சரவணா ஸ்டோர்ஸ் ஆஸ்தான இயக்குநர்கள் ஜேடிஜெர்ரி புது விளம்பரத்தை இயக்கி வருகிறார்கள்.

ஆனால் இந்த முறை அண்ணாச்சி அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். ஆம்.. புதிய விளம்பரத்தில் தமன்னாவோ, ஹன்சிகாவோ  அல்லது வெளிநாட்டு அழகிகளோ இல்லை.

சிரிச்சா போச்சு' டீமில் இருக்கும் ராமர், வடிவேல் பாலாஜி, அசார், விஜய் டி.வி ரியோ மற்றும் சீரியல் ஹீரோயின்ஸ் என ஒரு பட்டாளமே தீபாவளி விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்வழக்கம்போல்  பிருந்தா மாஸ்டர் இந்த விளம்பரத்துக்கு கோரியோகிராஃபி செய்திருக்கிறார்.

நான் ஏற்கெனவே இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி எடுத்த சில விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். ஆனால், அது எல்லாமே சில குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் ஒளிப்பரப்பாகுற விளம்பரங்கள். ஆனால் இந்தமுறை, தமிழ்நாடு முழுக்க ஒளிப்பரப்பாகுற விளம்பரத்தில் நடிச்ச வெச்சிருக்கார், அதுவும் ட்ரெண்டிங் ஸ்டார் சரவணா அண்ணாச்சியோடு நடிக்க வெச்சிருக்கார் என அசார் தெரிவித்துள்ளார்.

அண்ணாச்சி செம டைப். சத்தமா பேச மாட்டார்; ஷூட்டிங் டைம்ல உட்காரக்கூட மாட்டார். செம எனர்ஜியா எல்லா ஷாட்டிலும் நடிச்சார். உண்மையாகவே இது மறக்க முடியாத அனுபவம் என்றும் அசார் தெரிவித்துள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்