
பிரபல நடிகை சாய் பல்லவி காதலில் விழுந்துள்ளதாக வந்த தகவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி. இவருக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவி தேஜாவுக்கும் இடையே காதல் மலந்துள்ளதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் பரவியது.
நடிகர் கண்டா ரவி தேஜா ஏற்கனவே திருமணமானவர்.இவர் ஆந்திர கல்வி மந்திரி கண்டா ஸ்ரீநிவாஸ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,தன் மகனின் காதல் கிசுகிசுவை மறுத்து பதில் கொடுத்து உள்ளார்.
தன் மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வந்த தகவல் உண்மையானது அல்ல. அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்காத நிலையில்,காதல் செய்வதாக வதந்தி பரவுவது குறித்து வருத்தமாக உள்ளது என தெரிவித்தார் எனது மகனின் வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இது போன்ற வதந்திகளால் இருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதற்காக இந்த விளக்கத்தை சொல்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.