அதிகரிக்கும் செம்மரக்கடத்தல்! உலகிலேயே இந்த மரத்திற்கு மட்டும் உள்ள அறிய சக்தி! ஒளிந்திருக்கும் ரகசியம்!

By thenmozhi gFirst Published Oct 27, 2018, 3:01 PM IST
Highlights

பெரும்பாலும் ஆந்திர எல்லை பகுதிகளில் நாளுக்கு நாள் செம்மரக்கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. தீவிர போலீஸ் பாதுகாப்பை மீறி, பலர் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிறு துண்டு செம்மரக்கட்டை கூட பல லட்சம் என பேரம் பேச படுகிறது. 

அதிகரிக்கும் செம்மரக்கடத்தல்!  உலகிலேயே இந்த மரத்திற்கு மட்டும் உள்ள அறிய சக்தி! ஒளிந்திருக்கும் ரகசியம்! 

பெரும்பாலும் ஆந்திர எல்லை பகுதிகளில் நாளுக்கு நாள் செம்மரக்கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. தீவிர போலீஸ் பாதுகாப்பை மீறி, பலர் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிறு துண்டு செம்மரக்கட்டை கூட பல லட்சம் என பேரம் பேச படுகிறது. 

தேக்கு, சந்தன மரம் போன்றவற்றை பற்றி பலருக்கு தெரியும் ஆனால் இந்த செம்மரத்தை பற்றி தெரிந்தவர்கள் மிக சிலர் தான். 

சரி வாங்க செம்மரம் பற்றிய தகவல்களை பார்க்கலாம்:

பெயர் காரணம்:

இந்த மரத்திற்கு "செம்மரம்' என பெயர் வர காரணம்... இந்த மரத்தின் நடு பகுதி, ரத்தத்தின் நிறத்தில் இருப்பதால் இதனை செம்மரம் என பலர் கூறுகிறார்கள். மேலும் இதில் சந்தன மரத்தின் குண நலன்கள் உள்ளதால்... சிலர் செஞ்சந்தன மரம் என்றும்... சந்தன வேங்கை என்றும் அழைக்கிறார்கள்.

வளரும் இடங்கள்:

பொதுவாக செம்மரங்கள், மலைப்பகுதிகளிலேயே ஒரே வளரவிடத்தில் மட்டுமே வளரும் இயல்புடையவை.

முதிர்ச்சியடையும் காலம்:

மலைக்காடுகளில் வளரும் இயல்புடைய இந்த மரங்கள் நான்கு ஐந்து ஆண்டுகளிலேயே 30 அடி வரை வளரக்கூடியவை. இருப்பினும் இந்த மரம் நன்கு பெருத்து முதிர்ச்சியடைய இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகும்.

பயன்கள்:

செம்மரங்கள் சித்த மருத்துவத்தில் நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரும வியாதிகள், மூலம், சர்க்கரை பாதிப்பு, கை கால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள், பாக்டீரியா, மற்றும் புற்று நோய் ஆகிய வியாதிகளுக்கு செம்மரத்தில் இருந்து மருந்துகள்  கொடுத்து வருகிறார்கள்.

நம் உடலில், நிற மாற்று சிகிச்சைகளில், வைரம் பாய்ந்த செம்மரத்தின் பங்கு அதிகம். இந்த மரத்தில்  உள்ள டீரோஸ்டில்பின்கல், சிடோஸ்டேரோல், போன்ற வேதி பொருட்கள் அதிக பலன்கள் தருகிறது. மேலும் அழகு சாதனா பொருட்களிலும் இதன் பங்கு அதிகம்.

மனிதருக்கு பல வித நன்மைகளை தரும், தன்மைகள் இந்த மரத்தில் காணப்பட்டாலும்... இவை எல்லா வற்றையும் விட மிகப்பெரிய நன்மையாக, மனித குலத்திற்கே பேருதவியாக விளங்கும் தன்மை இந்த மரத்திற்கு உள்ளது என்பதாலேயே இந்த மரத்தை அதிகம் கடத்துகிறார்கள்.

செம்மரங்கள் அணு கதிர் வீச்சை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் இந்த உலகிலேயே அணு உலைகள், அணு ஆயுதங்கள் இவற்றின் கதிர் வீச்சு நேரிடுகையில், அவற்றின் ஆற்றலை தடுக்கும் திறன் கொண்ட ஒரே மரம் இது தான் என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதே போல் சீன உள்ளிட்ட நாடுகளில், இந்த மரங்களை அணு கதிர்களை வெளியேறாமல் தடுக்கவும், அணு உலைகளில் பாதுகாப்புக்காகவும் பயன் படுத்துவதாக கூறப்படுகிறது. 

இந்த ஒரே காரணத்திற்காக செம்மரங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சீனாவிற்கு கடத்தப்படுவதாக தெரிகிறது. கடத்தல் காரர்களால் அழிந்து வரும் இந்த அறிய வகை மரங்களை தற்போது அரசாங்கமே தன்னுடைய நேரடி பார்வையில் வளர்த்து வருவது சற்று ஆறுதலான விஷயம் என்றே கூறலாம். 

click me!