அஜித் விஜய் ரஜினிக்கு டஃப் கொடுக்க போகும் சரவணா அண்ணாச்சி..! ரசிகர்கள் வெறித்தனம் ...!

thenmozhi g   | Asianet News
Published : Dec 14, 2019, 05:48 PM IST
அஜித் விஜய் ரஜினிக்கு டஃப் கொடுக்க போகும் சரவணா அண்ணாச்சி..! ரசிகர்கள் வெறித்தனம் ...!

சுருக்கம்

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

அஜித் விஜய் ரஜினிக்கு டஃப் கொடுக்க போகும் சரவணா அண்ணாச்சி..! ரசிகர்கள் வெறித்தனம் ...!

தூத்துக்குடி மாவட்ட தலைமை ரசிகர நற்பணி மன்றத்தின் சார்பாக உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து தூத்துக்குடி முழுதும் ஆங்காங்கு ஒட்டப்பட்டு உள்ளது.இந்த போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மாவட்ட  தலைவராக முத்துதுரை, செயலாளராக சி.கே. ஆனந்த் என்பவரும் மற்ற சில பதவிகளுக்கு ஆட்களை நியமித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கூடுதலாக உறுப்பினர் சேர்க்கை என கொடுத்து மொபைல் நம்பரும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி வேறு லெவலுக்கு சென்றுள்ளார் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையில் பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர். 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு இணையாக அடுத்தடுத்து விளம்பரப்படங்களில் தோன்றினார். இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில்  சினிமாவில் ஹீரோவாகி விட்டார். இதற்கிடையில் உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து, மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டு உள்ளது.

படம் வருவதற்கு முன்பாகவே இந்த அளவுக்கு ரசிகர் மன்றம் வைத்து இப்போதே பிரபலப்படுத்த  ஆட்கள் ரெடியாகி விட்டனர். இதன் மூலம் அஜித் விஜய் ரஜினி ரசிகர்ளுக்கே அதிக டஃப் கொடுப்பார் போல இருக்கு சரவணா ஸ்டார் அண்ணாச்சி என பலரும் விமசரன் செய்ய  தொடங்கி விட்டனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்